சீரி ஏ லீக் பட்டத்தை கைப்பற்றிய இத்தாலியின் நபோலி கால்பந்து அணியின் வெற்றியை ரசிகர்கள் நகரங்களை வண்ணமயமாக்கி உற்சாகமாக கொண்டாடினர். சீரி ஏ லீக் 2024-25 தொடரில் ஸ்காட் மெக்டோமினே மற்றும் ரோமெலு லுகாகு ஆகியோர் கோல் அடித்து காக்லியாரியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து நகரம் முழுவதும் வண்ணமயமாக ஜொலித்தது. வானில் தீப்பொறிகள் ஒளிர்ந்ததுடன், இத்தாலிய மூவர்ணக் கொடிகளுடனும், நீல வண்ணம் பூசப்பட்ட கார்களுடனும் ரசிகர்கள் கொண்டாடினர்.