உலக அழகிப் போட்டியில் மிஸ் மெக்சிகோவை "முட்டாள்" என்று அழைத்த அமைப்பாளரால் போட்டி அரங்கில் இருந்து அழகிகள் வெளிநடப்பு செய்தனர். தாய்லாந்தின் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி நடந்து வருகிறது. இதில் போட்டியை நடத்தும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பாளர்களில் ஒருவரான தாய்லாந்து தொழிலதிபர் நவாட் இட்சராகிரிசில் ((Nawat Itsaragrisil )) மிஸ் மெக்சிகோ பாத்திமா போஷை முட்டாள் எனக்கூறி பகிரங்கமாக அவமானப்படுத்தினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற பாத்திமா போஷை அங்கிருந்து வெளியேறினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நடப்பு மிஸ் யுனிவர்ஸ் உட்பட பல போட்டியாளர்கள் நிகழ்வில் இருந்து வெளியேற, பின்னர் நவாட் மன்னிப்பு கோரினார்.