அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கிய காசா அமைதிக் குழு அமைப்பில் இணைய சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் மோதல்?