காஸா அமைதி ஒப்பந்தம், பரஸ்பர பிணை கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதினும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் தொலைபேசியில் உரையாடியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்பின் 20-அம்ச காசா திட்டத்தை உள்ளடக்கிய ஒரு வரைவுத் தீர்மானத்தை அங்கீகரிக்க அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவும் பாதுகாப்பு கவுன்சிலில் மற்றொரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த இரு வரைவு தீர்மானங்களும் நாளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில் புதினும், நேதன்யாகுவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.