ரஷ்ய அதிபர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையேயான கசப்பான உறவு, அமைதி முயற்சிகளை கடினமாக்கும் போதிலும் அதற்கான ஒரு தீர்வை எட்டுவதற்கு மிக அருகில் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கீவ் மற்றும் பிற நகரங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு புதினிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது, அவர் அதற்கு ஒப்புக் கொண்டது மிக நல்ல விஷயம் என ட்ரம்ப் தெரிவித்தார். இதனிடையே தெற்கு ஜபோரிஜியா பகுதியில் இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். Related Link ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி மீது தடை