சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலைவிபத்தில், புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவில் இருந்து உம்ரா புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள், சவுதியில் மெக்காவை பார்வையிட்ட பின் மதினாவுக்கு பேருந்தில் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், மதினாவுக்கு மிக அருகிலேயே பேருந்தின் மீது டீசல் டேங்கர் லாரி மோதி பெரும் தீவிபத்து நேர்ந்துள்ளது. இதில், 42 இந்தியர்களும் உடல் கருகி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் தெலுங்கானாவின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.