இலங்கையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பாலத்தில் சென்ற கார், அடித்துச் செல்லப்பட்டதில் பயணித்த தாத்தா, பாட்டி மற்றும் 6 வயது பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்