அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓரிகான் எல்லைக்கு அருகில் உள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே காலை 10.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.