இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நுகர்வோருக்கு அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இத்தகைய ஒப்பந்தம் இரு நாட்டு அரசின் பரந்த செயல் திட்டம் எனவும் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.