அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. நியூயார்க், வாஷிங்டன், பென்சில்வேனியா, ஓஹியோ, மிச்சிகன் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தைவிட அதிகளவு குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சாலைகள் மட்டுமின்றி, வீடுகள் மற்றும் வாகனங்களே தெரியாத அளவுக்கு, பனிப்போர்வை போர்த்தி காணப்படுகின்றன.