பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் 2ஆவது மாடிக்கு சைக்கிள் மூலம் வேகமாக சென்று புதிய வரலாற்று சாதனையை பிரெஞ்சு டிக்டாக் பிரபலம் படைத்துள்ளார். பிரெஞ்சு டிக்டாக் பிரபலமான ஆரேலியன் போண்டெனாய், ஈபிள் டவரின் 686 படிகளில் வெறும் 12 நிமிடங்கள் 30 விநாடிகளில் ஏறினார். அப்போது, கால்கள் தரையில் படக்கூடாது என்ற சவாலையும் ஏற்று சாதனை படைத்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.