இன்று நெடுந்தீவு கடற்படை பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த 239 புறாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனுடன் அவற்றை கடத்தி வந்த மூன்று சந்தேகநபர்களும் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் மற்றும் 34 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட புறாக்களும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரும் இன்று பிற்பகல் ஊர்காவற்றுறை நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதையும் படியுங்கள் : பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 32 பேர் பலி