சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் உள்ள தொடர்பு குறித்து சவுதி பட்டத்து இளவரசரிடம் கேள்வி எழுப்பிய ABC நிறுவன பெண் செய்தியாளரை டிரம்ப் கடுமையாக கண்டித்தார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த டிரம்ப், பின்னர் அவருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ABC நிருபர் மேரி புரூஸ் சவுதி பட்டத்து இளவரசரிடம் ஜமால் கொலை வழக்கு கேள்விகளை எழுப்பியபோது, குறுக்கிட்ட டிரம்ப் அவரை மோசமான நிருபர் என்றும் ஏபிசி பொய் செய்திகளை வெளியிடுவதாக கடுமையாக சாடினார். மேலும் புரூஸை நோக்கி உங்களிடமிருந்து இனி கேள்விகள் இல்லை என்ற டிரம்ப் ABC ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்ய உள்ளதாக அச்சுறுத்தினார்.