போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே சுமார் 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் பிணை கைதிகள் ஆயிரத்து 200 பேரை ரஷ்யாவிடம் இருந்து மீட்கும் நோக்கில், போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் தள பதிவில் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்காக, மத்தியஸ்தகம் பேச துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து ரஷ்யாவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை..