அமெரிக்க விமான படையின் அணுசக்தி திறன் கொண்ட மினிட்மேன் III ஏவுகணை சோதனை நடைபெற்றது. அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து ஏவுப்பட்ட இந்த ஏவுகணை 4,200 மைல்களை கடந்து மார்ஷல் தீவில் உள்ள ரீகன் பாலிஸ்டிக் பாதுகாப்பு சோதனை தளத்திற்கு சென்றது. இந்த ஏவுகணை சோதனை வழக்கமானது என்றும், உலக நாடுகளின் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதில் அல்ல என்றும் அமெரிக்க ராணுவம் தெளிவுப்படுத்தி உள்ளது.