இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் நாடு என்றும், அங்கு ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை தான் விரும்பவில்லை எனவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தோஹாவில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்குடன் தனக்கு சிறிய பிரச்னை உள்ளதாக கூறினார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை என்றவர், இந்தியாவின் நலன் குறித்து டிம் குக் எண்ணினால், அங்கு அவர் தொழிற்சாலை அமைக்கலாம் என்றார். ஆனால் உலகில் அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அங்கு பொருட்களை விற்பது கடினமாக இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.