இந்தியா

பெண்களை தொல்லை செய்பவர்களை எம தர்மன் தண்டிப்பார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை எம தர்மன் உடனுக்குடன் தண்டிப்பார் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது சட்டங்கள் பாதுகாப்பு வழங்கும் என தாம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாக கூறினார். மேலும் சாலையில் செல்லும் நமது மகள்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டு செல்பவர்களுக்காக, அடுத்த சாலையிலேயே எமதர்மன் காத்திருப்பார் எனவும், அவர்கள் எமதர்மனிடம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் எச்சரித்தார்.

00 Comments

Leave a comment