ஐ.பி.எல் போட்டிகளே ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டவைதான். பரபரப்புக்காகவும், மக்கள் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும் தான் ஐ.பி,எல்லில் போட்டிகளின் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன என சிலர் இணையதளங்களில் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஐ.பி.எல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. தோனிக்கு இந்த தொடர்தான் கடைசி தொடர் என்றெல்லாம் யூகங்கள் எழுந்து அடங்கிய நிலையில் சென்னையில் சி.எஸ்.கே அணி ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்புள்ள ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் ஆடியது. கடைசி வரை சென்ற ஆட்டத்தில் சென்னை வென்று 10வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியது.
இந்த போட்டி முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட ஸ்க்ரிப்டடான போட்டியா என சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முதல் நிகழ்வு குஜராத் அணி சென்னை நிர்ணயித்த இலக்கை துரத்தும் போது 17.3வது ஓவரில் குஜராத் வீரர் விஜய் ஷங்கர் தூக்கி அடித்த பந்தை சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் செய்வார். இதனால் அவுட் ஆகி வெளியேறியிருப்பார் விஜய் ஷங்கர். ஆனால் அந்த கேட்ச் தரையில் பட்டது போன்றே தெரியும். அதனை வேகமாக கன்ஃபர்ம் செய்து அவுட் கொடுத்திருப்பார் மூன்றாவது நடுவர். இதில் இன்னும் தெளிவு இல்லாமல் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவு மாறியிருந்தால் சென்னை அணியின் வெற்றி பறிபோகவும் வாய்ப்பிருந்ததாக சொல்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
அடுத்ததாக விதிகளை சென்னை அணியும்,. கேப்டன் தோனியும் மீறியுள்ளனர். இது கண்டிக்கப்படவில்லை அதனால் முடிவு மாறியது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 16வது ஓவரை வீச ஒரு ஓவர் வீசி ஓய்வில் இருந்த பதிரணாவை அழைத்திருப்பார் தோனி ஆனால் அவர் ஓய்வில் இருந்து பந்துவீச 8 நிமிடம் எடுக்க வேண்டும் என்பதை நடுவர்களிடம் முறையிட்டே காலதாமதமாக்கியிருப்பார் தோனி. இதனால் 16,18,20வது ஓவர்களை பதிரணா வீசி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார். ஒருவேளை தோனி காலதாமதப்படுத்தாவிட்டால் பதிராணா 3 ஓவர்களை வீசமுடியாமல் போட்டியின் முடிவு மாறியிருக்கும். இதனை ஐ.பி.எல் நிர்வாகம் கண்டிக்க தவறியதே இந்த போட்டியை ஸ்க்ரிப்ட் என சொல்ல காரணமாக அமைகிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
மும்பை அணி தொடர் தோல்விகளிலிருந்து ப்ளே ஆஃப் வந்தது, ஆர்.சி.பி ஆட்டம் கடைசி நேரத்தில் மாறியது, புள்ளிப்பட்டியலில் நீண்ட நாட்கள் முதல் 4 இடங்களுக்குள் இருந்த ராஜஸ்தன் வெளியேறியது எல்லாமே தொடரின் போக்கு என சொன்னாலும் அதுவும் போட்டியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரிப்ட் என கூறும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தோனியின் எண்ட்ரிக்கும், சி.எஸ்.கேவின் வெற்றிக்கும் உணர்ச்சிப்பூர்வமான அன்பை வெளிப்படுத்தியதும், சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஸ்க்ரிப்ட் என சொல்லும் வாதத்தை வென்று விடுகிறது . ஐ.பி.எல் ஸ்க்ரிப்ட்டா இல்லையா என்பதை தாண்டி ஐ.பி.எல் ஒரு சீரியஸான பொழுதுபோக்கு