தொழில�ந�ட�பம�

ஹுண்டாய் நிறுவனத்தின் டக்சன் கார் அறிமுகம்

        20

புதிய மேம்படுத்தப்பட்ட எஸ்.யூ.வி.காரான டக்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள ஹுண்டாய் நிறுவனம், ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது.

சமீப காலமாக இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய், எஸ்.யூ.வி. மாடல் கார் டக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்கும் இந்த காரின் விலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

புதிய தொழில்நுட்பங்களுடன் டக்சன் காரை அறிமுகபடுத்தியுள்ள ஹுண்டாய் நிறுவனம், 3 வருடத்திற்கு வரம்பற்ற கிலோ மீட்டர் வாரண்டியோடு, 30 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இலவச பராமரிப்பும் வழங்குகிறது


Share :