தொழில�ந�ட�பம�

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய நவீன செயற்கைக்கோள்

        20

நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிய சுமார் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே விலை உயர்ந்த அதிநவீன செயற்கைக்கோள் இந்திய அமெரிக்க கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வருவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே சிவன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் விஞ்ஞான முன்னேற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் அந்த செயற்கைகோள் மூலம் பூமியை ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு மிக நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணிக்க முடியும் என்றார்.


Share :