தொழில�ந�ட�பம�

வரும் அக்டோபரில் 5ஜி சேவை துவங்கும்

        15

5ஜி சேவைகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.5ஜி-க்கான அலைக்கற்றைகளை ஏலம் விடும் பணி நேற்று முடிவடைந்து அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.

ஏலத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,வரும் 10 ஆம் தேதிக்குள் ஏல நடைமுறைகள் முடிந்து சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

முதல்கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை துவக்கப்படும் எனஅவர் கூறினார். 5ஜி ஏலத்தில் மொத்தமுள்ள அலைக்கற்றைகளில் சுமார் 59 சதவிகித த்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.


Share :