தொழில�ந�ட�பம�

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350பைக்

        14

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக் வருகிற 7-ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அந்த பைக்கின் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இளம் தலைமுறையினரின் மனகவர்ந்த பைக்காக இருக்கும் ராயல் என்பீல்டு புல்லட் 350, கிளாசிக் 350 போன்ற பைக்குகள் இந்தியாவில் அதிக விற்பனையாகும் பைக்குகளாக இருக்கின்றன.

இந்த வரிசையில் ராயல் என்பீல்ட் நிறுவனம் அதன் பைக்குகளிலேயே குறைந்த விலையில் தொடங்கும் ஹண்டர் 350 பைக்கை வெளியிடவுள்ளது. மற்ற 350 சிசி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், வேகம், நிலைத்தன்மை ஆகியவை ஹண்டர் பைக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஹண்டர் 350 இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற நிலையில், இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை.


Share :