Auto Mobiles

ஹிமாலயன் 450 பைக்கின் சோதனை ஓட்டம்

        18

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் 450 பைக்கிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக திறன் கொண்ட பைக் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், அட்வெஞ்சர் செல்லும் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வகை 450 சிசி திறன் கொண்ட ஹிமாலயன் பைக்கை வடிவமைத்து வருகிறது.

இதனை சோதனை ஓட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கான டீசரை ராயில் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பைக் அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்கின் என்ஜின் 40 ஹெச்பி பவர், 45 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த பைக்கின் ஆரம்ப விலை 2 லட்சத்து 15ஆயிரம் ரூபாயில் இருந்து 2லட்சத்து 22ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share :