வர�த�தகம�

நாட்டின் அன்னிய செலாவணி இருப்பில் வீழ்ச்சி - ரிசர்வ் வங்கி தகவல்

        20

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையில், கடந்த 19 ஆம் தேதி நிலவரப்படி அன்னிய செலாவணி இருப்பு 45 லட்சத்து 12 ஆயிரத்து 424 கோடி ரூபாயாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த அன்னிய செலாவணி இருப்பில் இருந்து சுமார் 53 ஆயிரத்து 500 கோடி ரூபாய் குறைந்து விட்டதால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக அதிகரித்ததே அன்னிய செலாவணி இருப்பு குறைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் துவங்கியதில் இருந்து பன்னாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு, டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு சரிந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Share :