வர�த�தகம�

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

        20

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவில் 79 ரூபாய் 87 காசுகளாக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80 ரூபாய் 11 காசுகளாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 80 ரூபாய் பூஜ்யம் ஆறு காசுகளாக இருந்தது.

இந்த ஆண்டு மட்டும் டாலரின் மதிப்பு 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Share :