ஆன�மீகம�

ஆறரை அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவதானிய தேங்காய் விநாயகர்

        15

மதுரை அருகே உருவாக்கப்பட்டுள்ள நவதானிய தேங்காய் விநாயகர் சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை முழுவதும் 300க்கும் மேற்பட்ட விநாயர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

அந்த வகையில் மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நவதானிய தேங்காய் விநாயகர் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு தரிசித்துச் செல்கின்றனர்.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களி மண், நவதானிய விதைகள் மற்றும் 16 கிலோ தேங்காய் நார்கள் கொண்டு ஆறரை அடி உயரத்தில் இந்த விநாயகர் சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது.


Share :