கல�வி

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று ஒத்திவைப்பு

        18

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.

இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், முதல்தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரை கணினி வழியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share :