கல�வி

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க சட்டமுன்வடிவு

        14

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்த நிலையில் ஓரிரு நாளில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என முடிவெடுக்கப்பட்ட நிலையில் சென்னை அருகே பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்ட முன்வடிவிற்கான விளக்கங்களை தலைமை செயலாளர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share :