ஆன�மீகம�

வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா

        20

திருவாரூர் மாவட்டம் வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் சன்னதியின் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர மற்றும் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனை தொடர்ந்து 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.


Share :