கல�வி

உயர் கல்வி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

        14

அரசு பள்ளியில் பயின்ற உயர் கல்வி மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஆசிரியர் தினமான இன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.


Share :