விளையாட�ட�

இலங்கையுடன் இந்தியா பலப்பரீட்சை

        14

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இந்தியா இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் முன்னேறியுள்ள நிலையில், இச்சுற்று முடிவில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

ஒரு வேளை இன்று இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்தியாவின் இறுதி சுற்று வாய்ப்பு அமையும்.


Share :