கல�வி

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

        19

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 17 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வை எழுதினர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தேர்வை, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

கடந்த மாதம் 31ஆம் தேதி நீட் ஒ.எம்.ஆர் விடைத்தாள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்கிற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


Share :