விளையாட�ட�

காதலியை கரம் பிடிக்கிறார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்

        17

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுலும், அவரது காதலியும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான நடிகை அதியா ஷெட்டியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது திருமணம், மகாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் திருமணத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற்போல திருமண தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.


Share :