விளையாட�ட�

விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் - ஜடேஜா

        19

காயத்தால் அவதிப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இதனை தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தாம் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

அதில், பிசிசிஐ, சக வீரர்கள், பிசியோ மருத்துவர்கள், ரசிகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட ஜடேஜா, காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து பயிற்சியை தொடங்கி அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.


Share :