விளையாட�ட�

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

        18

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சார்ஜாவில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலாவது பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாற, ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது.

ஆனால் கடைசி ஓவரில் நசீம்கான்ஷா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற செய்தார்.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Share :