கல�வி

செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு

        20

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

1 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ள கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும், முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தபின் மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையும், எஸ்சி பிரிவுக்கான கலந்தாய்வு நவம்பர் 19, 20 ஆம் தேதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share :