உலகம�

பாகிஸ்தானில் கனமழை.! 1.60 கோடி குழந்தைகள் பாதிப்பு.!

        14

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு சுமார் ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1,545 பேர் உயிரிழந்து உள்ளனர்.

60 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுத்தமான குடிநீர் மற்றும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை என்று ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Share :