லெஜண்டுக்கே இந்த நிலைமையா? | இயக்குநர்களை தேடும் ஹீரோ

        15

தி லெஜண்ட் படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்த அருள் சரவணன், அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இயக்குநர்கள் யாருமே அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. யாருமே தன்னை வைத்து படம் எடுக்க முன்வராததால் அவரே களத்தில் குதித்து முன்னணி இயக்குநர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கேற்றவாறு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுமாறு Request கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எப்படியாவது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என நினைத்து கனவோடு வாழ்ந்து வரும் லெஜண்ட் சரவணனின் சினிமா வாழ்க்கை போகிற போக்கை பார்த்தால் ஒரே படத்தோடு முடிந்துவிடுமா? என கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவுக்கு வரவேண்டும் என்பது ஒரு சிலருக்கு ஆசையாக இருக்கும்...ஒரு சிலருக்கு மட்டும் தான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பேராசை இருக்கும். அப்படி பேராசை பிடித்து சினிமாவுக்குள் வந்தவர் தான் தொழிலதிபர் அருள் சரவணன்...

சொந்தமாக புரடெக்ஷன் கம்பெனி ஆரம்பித்து, கோடிகளை கொட்டி படமெடுத்த லெஜண்ட் சரவணனுக்கு அதில் பாதி வசூல் கூட வரவில்லை. ஆனாலும், சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பு என்பது பயங்கரமாகவே இருந்தது.

இந்த நிலையில், ஒரு படத்திற்கு கிடைத்த வரவேற்பிலேயே திகைத்து போன அண்ணாச்சி அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக இயக்குநர்கள் யாருமே அவரை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது படத்திலும் தாமே தயாரித்து, நடிகராக நடிக்க அண்ணாச்சி தயாராக இருந்த நிலையில், இதுக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்டனு இயக்குநர்கள் பேச்சுக்கு கூட அவரை சந்திக்கலையாம்.

முழுக்க முழுக்க வெளிநாட்டில் சூட்டிங், புதுமுக நடிகைகள், பிரமாண்ட ஆடியோ லாஞ்ச், படக்குழுவினருக்கு திரைத்துறையில் இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்காத சம்பளம் என அடுத்த படத்தை இப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என கனவு கோட்டை கட்டி வைத்து காத்துக் கொண்டிருந்த லெஜண்ட், கனவில் மண் அள்ளி போடும் வகையில் இயக்குநர்கள் யாருமே தன்னை வைத்து படம் பண்ண ரெடியாக இல்லாததால் அப்செட்டில் இருக்கிறாராம்.

இதனால், தாமே களத்தில் இறங்கி லோகேஷ் கனகராஜ் போன்ற முன்னணி இயக்குநர்களை சந்தித்து தனக்கேற்றவாறு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுமாறு அண்ணாச்சி பணிவுடன் கேட்டுகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.பல சறுக்கல்கள் வந்தாலும், வரும் தீபாவளிக்கு எப்படியாவது தனது இரண்டாவது படத்திற்கான அப்டேட்டை வெளியிடுவேன் என லெஜண்ட் சரவணன் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.... அப்படி பார்த்தால் இந்த தீபாவளி மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும்.


Share :