Big Stories

மாணவிகள் குளிக்கும் வீடியோ காதலனுக்கு அனுப்பிய மாணவி!

        20

ஹாஸ்டல் தங்கி இருந்த கல்லூரி மாணவிகள் குளிக்கும் சீன்களை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய சக மாணவி... ஆபாச வீடியோக்கள் இன்டர்நெட்டில் பரவியதால், தற்கொலைக்கு முயன்ற மாணவிகள்.. விஷயத்தை அமுக்க நினைத்த பல்கலை நிர்வாகம்... பல்கலையை முற்றுகையிட்டு மாணவர்கள் நடத்திய நள்ளிரவு ஆர்ப்பாட்டம் என களேபரமாக காட்சி அளிக்கிறது மொஹாலி சண்டிகர் பல்கலைக்கழகம்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் 2012 ல் துவக்கப்பட்டது. லூதியானாவில் இருந்து சண்டிகர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது இந்த தனியார் பல்கலைக்கழகம். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் ஒரு முட்டாள் மாணவியின் அத்துமீறலால் 60 க்கும் மேற்பட்ட மாணவிகள் கதிகலங்கி நிற்கின்றனர்.

ஹாஸ்டலில் தங்கியிருக்கும் இந்த மாணவிகள் குளிப்பதை வீடியோவாக பதிவு செய்த இந்த மாணவி, அவற்றை சிம்லாவில் இருக்கும் தனது காதலனுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்க அந்த நபரோ அவற்றை இணையத்தில் பதிவிட்டு அந்த பெண்களின் வாழ்க்கைக்கே உலை வைத்துள்ளான்.

மாணவிகளின் வீடியோக்கள் வைரலானதை அறிந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. குளியலறை காட்சிகளை எடுத்த மாணவி அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பஞ்சாப் போலீசார், அறையில் அடைத்து வைக்கப்பட்ட மாணவியை கைது செய்தனர். அவள் மீது IPC 354 ஆம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி செய்தியாளரிடம் பேசிய மொஹாலி சீனியர் எஸ்பி விவேக் சோனி, மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவித்தார். ஒரே ஒரு வீடியோதான் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் மொபைல் போன்கள் கஸ்டடியில் எடுக்கப்பட்டு பாரன்சிக் சோதனை நடப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், குற்றம் செய்த மாணவி கட்டாயம் தண்டிக்கப்படுவார் எனவும் பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது மிகவும் சீரியஸ் விவகாரம் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவியை சும்மா விடமாட்டோம் என பஞ்சாப் மாநில மகளிர் ஆணைய தலைவர் மணீஷா குலாத்தி தெரிவித்தார்.


Share :