சினிமா

5 கெட் அப்களில் சூர்யா.. முழுவீச்சில் உருவாகும் ”சூர்யா 42”

        18

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடிகர் சூர்யா 5 கெட் அப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை சூர்யாவின் 5 கதாபாத்திரங்களின் பெயர்கள் என கூறப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Share :