இந�தியா

லாட்டரியில் ரூ.25 கோடிஒரே ராத்திரியில் கோடீஸ்வரர் | ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

        14

கேரளாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப் என்பவருக்கு ஓணம் பம்பர் பரிசாக 25 கோடி விழுந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் ஆட்டோ ஓட்டி வரும் அனூப், குடும்ப வறுமையால் மலேசியாவிற்கு சென்று பணியாற்ற முடிவெடுத்துள்ளார்.

அதற்காக வங்கி ஒன்றில் கடனும் கேட்டு விண்ணப்பத்திருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு கேரளா லாட்டரியில் 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது.

அதனை தொடர்ந்து வங்கி கடனை கேன்சல் செய்த அனூப் தற்போது சொந்த ஊரிலேயே கோடிஸ்வர வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.
 


Share :