இந�தியா

+2 படித்த இல்லத்தரசிக்கு ரூ.1 கோடி | கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அசத்தல்

        19

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் +2 மட்டுமே படித்த இல்லத்தரசி 1 கோடி ரூபாய் வென்று அசத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 7 முதல் சோனி டிவியில் ஒளிப்பரப்பாகி, அமிதாப் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர் நிகழ்ச்சியின் இந்தி வடிவில் ஏற்கெனவே மேரி கோம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, மராட்டியத்தில் கோலாபூரைச் சேர்ந்த கவிதா சாவ்லா என்ற +2 படித்த இல்லத்தரசி, முதன் முறையாக போட்டியில் கலந்துகொண்டு 1 கோடி ரூபாய் வென்றுள்ளார்.

அடுத்த கேள்விக்கு பதிலளித்தால் கவிதா ஏழரை கோடி ரூபாய் வெல்வார் என்பதால் மக்கள் அதைக்காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Share :