"நிகான் கேமராவில் கேனான் லென்ஸ் கவர்" மோடியை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

        20

நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தைகளை பூங்காவில் திறந்து விட்டு கேமராவில் படமெடுத்த மோடியை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கேலி செய்து ட்வீட் செய்துள்ளார்.

நமீபியா நாட்டில் இருந்து வந்த 8 சிறுத்தைகளை மத்தியப் பிரதேச குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். இதை தொடர்ந்து சிறுத்தைகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் பிரதமர் மோடி புகைப்படம் எடுக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " அனைத்து புள்ளிவிவரங்களையும் மூடி வைத்திருப்பது இருக்கட்டும் ஆனால் கேமிராவிலும் லென்ஸ் கவர் மூடி வைக்கப்பட்டிருப்பதுதான் தொலைநோக்கு பார்வை" என கிண்டல் செய்து இருந்தார்.

அவர் பகிர்ந்து இருந்த புகைப்படத்தில் பிரதமர் புகைப்படம் எடுக்கும்போது கேமராவின் லென்ஸ் கவர் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த புகைப்படத்தில் நிகான் கேமராவில் கேனான் மூடி இருப்பது தெளிவாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.


Share :