Big Stories

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் | 400 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்பு

        20

சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரத்தில், பெண் வீட்டார் குறைந்த அளவே பங்கேற்ற நிலையில், அவர்களிடம் விவரங்களை கொடுப்பதில் மாப்பிள்ளைகளின் பெற்றோர் மும்முரம் காட்டிய சுவாரசிய சம்பவம் அரங்கேறியது.

இந்த பாடலுக்கு ஏற்ப அவரவருக்கு பிடித்த இணையை தேடும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி பல சுவாரசியங்களுடன் அரங்கேறியுள்ளது.

சென்னையில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 11-வது ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து விட்டு காத்திருந்தனர். பின்னர் பெண்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு, எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என கேட்டபின் அவர்களை வெளியே காத்திருக்க வைத்தனர்.

காத்திருக்கும் பெண்களிடம், மாப்பிள்ளைகளின் பெற்றோர் சென்று பேசி இருவருக்கும் சம்மதம் என்றால் அவர்கள் கவுன்சிலிங் கொடுத்து கீதா பவன் அறக்கட்டளை சார்பில் இலவசமாக திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

இந்த சுயம்வரத்தில் 400 ஆண்கள் பங்கேற்ற நிலையில், 40 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் தொடக்கம் முதலே பெண் வீட்டாரை சூழ்ந்து கொண்டு மாப்பிள்ளைகளின் பெற்றோர் விவரங்களை கொடுத்து பேச தொடங்கினர்.

இதனிடையே முதல் ஆளாக மேடையேறிய அழகுலட்சுமி, தான் அரசு இசைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு படித்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் கூறினார்.

இதே போல் தனது மகனின் நண்பனுக்காக பெண் பார்க்க திருச்சியில் இருந்து வந்த ஜோதி என்பவர், பலரிடம் சென்று பெண் கேட்ட சுவாரசிய சம்பவம் நடந்தது.


Share :