உலகம�

48 அடுக்கு மாடியில் ஏறிய ரியல் ஸ்பைடர் மேன்

        20

ரியல் ஸ்பைடர் மேன் என அழைக்கப்படும் அலைன் ராபர்ட் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு 48 அடுக்கு மாடி கட்டடத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அலைன் ராபர்ட் உலகின் மிக உயரமான கட்டடங்களில் கயிறு உள்ளிட்ட எந்த வசதியுமின்றி தனது கை, கால் மற்றும் உடல் வலிமையை பயன்படுத்தி மட்டும் ஏறி புகழ் பெற்றவர்.

இவர் தற்போது பாரிசில் உள்ள 613 அடி உயர கட்டடத்தை 60 நிமிடங்களில் ஏறி அசத்தியுள்ளார்.

தொடர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் அறுபது வயதிலும் இளமையுடன் வாழலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தனது 60வது வயதில் கட்டடத்தின் மீது ஏறியதாக ராபர்ட் தெரிவத்துள்ளார்.


Share :