இந�தியா

கொஞ்சம் தள்ளி நில்லுப்பா | ஃபோட்டோக்கு போஸ் கொடுக்க ஆளுநர் செய்த செயல் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

        20

புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் இந்திய கால்பந்து அணியின் கேப்டனை நகர செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இல.கணேசனின் செயலை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கொல்கத்தாவில் நடைபெற்ற டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், மும்பை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணியின் கேப்டனும், இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரி((Sunil Chhetri)) கோப்பையை பெற்றுக் கொண்டார்.

அவருக்கு கோப்பையை வழங்கிய மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன், புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த போது தன்னை மறைத்தவாறு நின்ற சுனில் சேத்ரியை லேசாக நகர செய்தார்.


Share :