இந�தியா

காவல்துறையை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் - அத்துமீறிய சி.வி.சண்முகம்

        14

புதுச்சேரியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் காவல்துறையை கடுமையான வார்த்தைகளால் அதிமுக மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதன்போது, போதை ஆசாமி ஒருவர் சண்முகத்தை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு பைக்கில் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், காவல்துறையையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.


Share :