இந�தியா

50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்

        18

50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்ததுடன் தனது புதிய கட்சியையும் அதில் இணைத்துள்ளார். கேப்டன் என்றழைக்கப்படும் அமரிந்தர் சிங் இரு முறை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சி அவரை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கியதை அடுத்து தனிக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டபோது ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்த அமரிந்தர் சிங், திங்களன்று ஜே பி நட்டாவை சந்தித்தார்.

தற்போது பாஜகவில் இணைந்ததோடு தனது கட்சியையும் அதில் இணைத்தார். அவரை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ வரவேற்றார்.

 


 


Share :