இந�தியா

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை வேட்டையாடிய ஜீயர்?

        15

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கர்தாடக லிங்காயத்து ஜீயரான ஷிவமூர்த்தி முருக ஷரனரு, பல ஆண்டுகளாக மைனர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார் என போலீஸ் தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரதுர்கா முருக மடத்தில் வைத்து அவர் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார் என வந்துள்ள புகார்களை போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த மடத்தில் முன்பு இருந்த சரனானந்த சுவாமிஜி என்பவர், பல சிறுமிகளை ஜீயர் வேட்டையாடியதாகவும், பலருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதுடன், பல சிறுமிகள் மடத்தின் சார்பில் இயங்கும் ஹாஸ்டலில் இருந்து காணாமல் போய்விட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அனாதை சிறுமிகளை த த்தெடுத்து அவர்களை மடத்தில் வளர்த்து தனது பாலியல் இச்சைகளை ஜீயர் தீர்த்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி எல்லாம் விசாரித்து வரும் போலீசார், தாய்லாந்துக்கு ஜீயர் நடத்திய இன்பசுற்றுலா உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.


Share :