உலகம�

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

        20

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ்((La Placita de Morelos)) கடற்கரையில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கே 46 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அனைவரும் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனால் திருவிழா நேரத்தில் கடை வீதியில் மக்கள் கூடுவது போல, எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தென்பட்டன.

இதனிடையே நிலநடுக்கம் காரணமாக சாலையிலும் விரிசல் ஏற்பட்டதால், அங்கு நின்றிருந்த சிறுவன் பயத்தில் கதறி அழுதான்.

இதனால் அவனை எங்கும் நகர விடாமல் பிடித்து தாய் ஆறுதல் கூறும் காட்சி, காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது.

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையான சேதம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Share :